மதியம் சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை..!! - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Wednesday 21 November 2018

மதியம் சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை..!!

நம்மை அறியாமலே நாம் செய்யும் சில தவறுகள் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் மதியம் சாப்பாட்டிற்கு பின் நாம் செய்யக் கூடாத செயல்களை பற்றி இப்போது பார்க்கலாம்.


மதியம் சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை:-



சாப்பாட்டிற்கு பின்னர் சிகரெட் பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இப்படி செய்தால் 10 சிகரெட் பிடிப்பதற்கு சமமாகும். இதன் மூலம் புற்றுநோய் விரைவில் வரக் கூடிய அபாயம் உண்டு.

சாப்பாட்டிற்கு பின்னர் பழங்கள் உட்கொள்ள கூடாது அப்படி செய்தால் செரிமான மண்டலத்தின் வழக்கமான செயல்பாடு தடைபடுவதோடு வயிற்று உப்பிசம் ஏற்படும்.


மதிய சாப்பாட்டிற்கு பின்னர் சூடான தேநீர் அருந்தினால் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


சாப்பிட்ட பின் குளிர்ந்த நீர் அருந்தினால் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இதனால் உணவில் உள்ள சத்துகளை உடல் உறிஞ்சுவது பாதிக்கும்.


மதிய சாப்பாட்டிற்கு பின்னர் தூங்கினால் செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனையால் அவஸ்தை பட வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment