பொதுத்தேர்வு விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு மையில் எழுத உத்தரவு - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Friday 30 November 2018

பொதுத்தேர்வு விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு மையில் எழுத உத்தரவு


பொதுத்தேர்வு விடைத்தாளில், நீலம் அல்லது கருப்பு மை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அரசு தேர்வுகள் இயக்கக, துணை இயக்குனர் மலர்வேணி தெரிவித்துள்ளார்.





இதுபற்றி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது, குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: 





பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, விடைத்தாளில், கேள்வி எண், முக்கிய வரிகள், தலைப்பு, சூத்திரம், குறிப்பிட்ட பெயர்கள், அடைப்புக்குறி போன்ற சிறப்பு எழுத்துக்களை எழுத, நீல நிறம் தவிர்த்து, கருப்பு உள்ளிட்ட வேறு நிற பேனா அல்லது ஸ்கெட்ச் மூலம் பயன்படுத்துகின்றனர். விடையை ஸ்கெட்ச் மூலம் அலங்கரிக்கின்றனர். இவ்வாறு செய்வதால், கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்றும், சிறந்த கையெழுத்துக்கு மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படும் என, சிலர் மாணவர்களை தவறாக வழிகாட்டுகின்றனர்.





அவ்வாறு அல்லாமல், வரும் மார்ச், ஏப்ரல் மாதம் நடக்க உள்ள மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத்தேர்வில், விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற மையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதிலும், தலைப்புக்கு கருப்பு மையும், விடைகள் எழுத நீல மையும் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க கேட்டுக் கொண்டுள்ளனர். மாற்று நிற மைகளை பயன்படுத்தும்போது, வேறு நபர் கையெழுத்து, ஒரே நபரின் கையெழுத்தா என உறுதி செய்தல், விடைத்தாளை தவறாக கையாள்தல் போன்ற பிரச்னைக்கு வாய்ப்புள்ளது. எனவே, அவற்றை தவிர்க்க, வேறு நிற பேனா, ஸ்கெட்ச் போன்றவைகளை பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

No comments:

Post a Comment