180க்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள்: விலங்குகள் பற்றியும் அரிய செய்திகள் - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Saturday 24 November 2018

180க்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள்: விலங்குகள் பற்றியும் அரிய செய்திகள்


நமக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளை நாம் வெளிக் கொணர வேண்டும். அவ்வாறு செய்யும் போது பலருக்கு தெரிந்து அவை பாராட்டு பெறும் போது நமக்குள் ஊக்கம் பிறக்கிறது. திறமைகள் புது வடிவம் பெறுகிறது. திறமைகளை வெளிப்படுத்த எத்தனையோ விதமான துறைகள் உள்ளன. வழிகள் உள்ளன. வரலாற்று ஆராய்ச்சி, அறிவியல் ஆராய்ச்சி, மொழிகள் பற்றிய ஆராய்ச்சி என பல உள்ளன. 









நாம் எதில் ஆர்வமாக இருக்கிறமோ அதில் நம் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் போது, நமக்கு ஒரு உற்சாகம் பிறக்கிறது.180 ஆய்வு கட்டுரைகள்அந்த வகையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த தமிழில் எம்.ஏ., எம்.பில்., படித்துள்ள பொன் .சரவணன் தமிழில் பல ஆய்வு கட்டுரைகளை எழுதி உள்ளார். இவர் இ- சேவை மையம் நடத்தி வரும் இவர் சங்க இலக்கியம், இலக்கணம், வரலாறு, திருக்குறள், பழமொழிகள் பற்றி இதுவரை 180 க்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை எழுதி, 'திருத்தம்' என்ற தன் இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார். தமிழ் மொழி, பண்பாடு மற்றும் வரலாறு குறித்த பார்வையில், தமிழ் மொழியின் பல்வேறு சொற்கள் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் சென்று எவ்வாறெல்லாம் திரிந்து வழங்கப்படுகின்றன என்பதை பல ஆதாரங்களுடன் விளக்கி உள்ளார்.தமிழ் ஆராய்ச்சிதமிழ் அகராதிகளில் பல சொற்களில் உள்ள பொருட் பிழைகளை சுட்டிகாட்டி, 'தமிழ் அகராதிகளின் குற்றங்களும், குறைகளும்' என்ற நுாலை வெளியிட்டுள்ளார். இவர் முன்மொழிந்த பல திருத்தங்களை சென்னையில் உள்ள தமிழக அரசின், ' செந்தமிழ் அகர முதலித் திட்ட இயக்ககம்' வெளியிட ஒப்பு கொண்டுள்ளது.





,தமிழக அரசின் ஒப்புதல் பெற்றும் நடத்தி வரும் 'தமிழ் கலை கழகம் ' என்ற அமைப்பில் 'மதிப்புறு உறுப்பினர்' ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது இவர் சங்க இலயக்கியத்தில் புலி, யானை, கரடி, மான், குரங்கு உள்ளிட்ட பல விலங்குகளை பற்றி கூறப்பட்டுள்ள பல அரிய செய்திகளை பாடல், பட விளக்கங்களுடனும் தொகுத்து, 'சங்க இலக்கியத்தில் விலங்கியல்' என்ற நுாலை எழுதி உள்ளார். இந்நுால் வன விலங்குகளை பற்றிய புதிய செய்திகளை மாணவர்களுக்கு புகட்டுவதாலும், வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைப்பதாலும் இந்நுாலை தமிழக அரசு பாராட்டி, தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச் சூழல் அமைச்சர் கருப்பணன் ஆகியோர் நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கினர். தொடர்ந்து தமிழ் குறித்தான ஆராய்ச்சிகளையும் சரவணன் செய்து வருகிறார்.இவரை வாழ்த்த 90036 64799, 70105 58268 .தமிழ் பாதுகாக்கபட வேண்டும்தமிழ் மீதுள்ள தீராத பற்று காரணமாக தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்து வருகிறேன். தமிழ் மொழியில் உள்ள சிறப்பு போன்று, வேறு எந்த மொழியிலும் கிடையாது.




இம் மொழி தவறாக உச்சரிக்கவும், பேசவும் கூடாது என்பதற்காக தொடர்ந்து ஆராய்ச்சி செய்து மொழியின் சிறப்பை ஆராய்ந்து வருகிறேன். 'தமிழ் பண்பாட்டு சுழியம் 'என்ற அமைப்பை ஏற்படுத்தி, பள்ளி மாணவர்களுக்கு பல போட்டிகள் நடத்தி சொந்த செலவில் பரிசுகள் வழங்கி வருகிறேன்.பொன்.சரவணன், எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர்,அருப்புக்கோட்டை.

No comments:

Post a Comment