4ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Monday 19 November 2018

4ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு

கடலுார் மாவட்டத்தில் 4ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் குறைபாட்டைப் போக்க 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





தமிழகத்தில் அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கற்றல் திறன் குறைபாடு இருப்பது ஆய்வில் தெரிந்தது. அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. இதற்காக, 4ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் முதல் கட்டமாக பயிற்சி அளிக்கவும், அதன் பிறகு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டது. அதன்படி, சென்னை மண்டலத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் 50 ஆசிரியர்களுக்கு நாளை 19, 20ம் தேதியும், 22 முதல், 24ம் தேதி வரை என 5 நாட்கள் பயிற்சி முகாம் வடலுார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடக்கிறது.






இதேப் போன்று, திருவாரூர், காஞ்சிபுரம், வேலுார், விழுப்புரம், நாகப்பட்டிணம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '4ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்பட்டதும், அவர்கள் மூலமாக மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உடைய மாணவ, மாணவியரை கண்டறிந்து பயிற்சி அளிக்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment