அறிவியல் அறிவோம்' ஏ.சி உடல் நலத்திற்கு தீங்காவது எப்போது? - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Friday 30 November 2018

அறிவியல் அறிவோம்' ஏ.சி உடல் நலத்திற்கு தீங்காவது எப்போது?

ஏ.சி உடல் நலத்திற்கு தீங்காவது எப்போது? அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (Science and Environment Center (CSE)), திட்ட மேலாளர், அவிகல் சோம்வம்ஷியிடம், பிபிசி குழுவினர் இதுபற்றி பேசினார்கள். 





 "நவீன ஏ.சி இயந்திரங்களில் முன்பு இருந்ததை விட இப்போது குறைவான நச்சு வாயுக்களே பயன்படுத்தப்படுகிறது. இவை R-290 ரக வாயு ஆகும், இது தவிர பல்வேறு விதமான வாயுக்களும் பயன்படுத்தப்படுகின்றன. முன்பு, குளோரோ ஃப்ளோரோ கார்பன்கள் பயன்படுத்தப்பட்டன.




இது ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. 15 ஆண்டுகளில் இந்த வாயு உபயோகத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற நிலைப்பாடும் எடுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ க்ளோரோ-ஃப்ளோரோ கார்பன் பின்னர் பயன்படுத்தப்பட்டது. இப்போது அதுவும் பயன்படுத்தப்படுவதில்லை" என்கிறார் அவிகல் சோம்வம்ஷி. உங்கள் வீட்டில் உள்ள ஏ.சியில் என்ன வாயு இருக்க வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? அதற்கான விடையையும் பகர்கிறார் சோம்வம்ஷி.




"தற்போது இந்தியாவில் ஏ.சியில் எரிவாயு ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன் வாயுவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், சில நிறுவனங்கள் தூய்மையான ஹைட்ரோகார்பனை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. தூய்மையான ஹைட்ரோகார்பன், பிற வாயுக்களைவிட சிறந்ததாக இருப்பதால், அதை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. இதைத் தவிர, இயற்கையான வாயுக்களையும் பயன்படுத்தலாம் என்பது தொடர்பான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்கிறார் அவர். டெல்லி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் கெளஷலிடம் இதுபற்றி பேசினோம். 'குளோரோ ஃப்ளோரோ நம் உடலில் நேரடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றபோதிலும், அவை கசிந்து இயற்கையாக இருக்கும் வாயுக்களோடு கலந்து தீங்கு விளைவிக்கும்' என்கிறார் கெளஷல்.





ஏ.சியில் இருந்து வெளியேறும் காற்று தலைவலியை ஏற்படுத்தலாம், ஆனால் மரணத்திற்கான காரணமாக மாறும் வாய்ப்புகள் குறைவே என்று CSE கூறுகிறது. ஏ.சியில் பயன்படுத்தப்படும் வாயு துர்நாற்றமோ, வித்தியாசமான மணமோ கொண்டதல்ல என்பதால், உங்கள் வீட்டு ஏ.சியில் கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிவது சற்று கடினமானதே. ஆனால், சில விஷயங்களில் கவனம் செலுத்தினால், ஏ.சியில் கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம். #ஏ.சி சரியாக பொருத்தப்படவில்லை என்றால் #வாயு செல்லும் குழாயில் அடைப்போ, வளைவோ இருந்தால்



#பழைய ஏ.சியின் குழாயில் துருப்பிடித்திருந்தால் #ஏ.சி வழக்கமான குளிர்வுத்தன்மையை கொடுக்காவிட்டால் *வீட்டில் ஏ.சி இருந்தால் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளவும் #முறையாக ஏ.சியை சர்வீஸ் செய்யவும் #நம்பிக்கைக்குரிய, தரமான மெக்கானிக்கிடம் ஏ.சி சர்வீஸ் செய்யவும் #விண்டோ ஏ.சியைவிட ஸ்பிளி ஏ.சி சிறந்த்து வாயுவின் தரத்தில் கவனம் செலுத்தவும். #தவறான வாயுவை ஏ.சியில் நிரப்பினாலும் ஆபத்து ஏற்படலாம்


ஏ.சி பயன்படுத்தும்போது கதவு சன்னல்களை மூடி வைத்திருக்க வேண்டியிருக்கும். இருந்தாலும், தினசரி சிறிது நேரமாவது கதவு, சன்னல்களை திறந்து காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். "அறையின் சன்னல்கள் அல்லது கதவுகளைத் திறக்கும்போது ஏ.சியை நிறுத்த மறக்கவேண்டாம். இல்லாவிட்டால் உங்களது மின்சார கட்டணம் ஷாக் அடிக்கும் அளவுக்கு அதிகரித்திருக்கும். காலையில் ஏ.சியை நிறுத்திய பிறகே, சன்னல் மற்றும் கதவுகளை திறக்கவும்" என்கிறார் சோம்வம்ஷி.     

No comments:

Post a Comment