பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 24 மணி நேரமும் மனநல மருத்துவ சேவை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் 24-hour mental health service for plus 2 students: Minister - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Wednesday 6 March 2019

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 24 மணி நேரமும் மனநல மருத்துவ சேவை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் 24-hour mental health service for plus 2 students: Minister

கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். பிளஸ் 2 தேர்வு எழுதும்மாணவர்களின் நலனுக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மனநல மருத்துவ சேவை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.



புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் ரூ.18 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட தாய் சேய் நல ஒப்புயர்வு மையத்தை திறந்து வைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நடைபெற்று கொண்டிருப்பதால் மாணவர்கள் மன நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு தற்கொலை செய்துவிடக்கூடாது என்பதற்காக 104 சேவை, கூடுதல் மனநல மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. 



இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மன நல மையங்கள் செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தில் தான் 70 சதவீதம் பிரசவம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. இந்த சதவீதத்தை அதிகரிப்பதற்காகவே மகப்பேறு ஒப்புயர்வு மையங்கள் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டு வருகிறது. 




இந்தாண்டு கர்ப்பிணி பெண்களுக்கு 3 மற்றும் 5ம் மாதங்களில் வழங்கப்படும் தாய் சேய் நல பெட்டகம் 6 லட்சத்து 40 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு 2 முறை வழங்கப்பட உள்ளது. இந்த பெட்டகத்தில் உள்ள மருந்துகளை உட்கொள்வதால் ஆரோக்கியமாக கர்ப்பிணிகள் இருப்பதோடு, பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும். இவ்வாறு அவர் கூறினார்.மரம் விழுந்து அமைச்சர் கார் சேதம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் வந்த கார் தாய் சேய் நல ஒப்புயர்வு மையத்தின் முன் நிறுத்தப்பட்டு இருந்தது. 



எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தின் கிளை முறிந்து அமைச்சரின் காரில் விழுந்தது. அப்போது காரில் யாரும் இல்லை. காருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.

No comments:

Post a Comment