மாதுளை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது..? - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Wednesday 21 November 2018

மாதுளை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது..?

மாதுளை பழத்தை சாப்பிட்டால் இரத்தம் அதிகரிப்பதோடு முகம் பொலிவு பெறும் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் மாதுளையை ஒரு சில வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். அதை இப்போது பார்க்கலாம்.




மாதுளை பழத்தின் மருத்துவ குணம்:-



மாதுளை பழச்சாறுடன் கடுக்காய் பொடி சேர்த்து பசையாக்கி தேமல் இருக்கும் இடத்தில் தடவினால் தேமல் சரியாகும். இதை 10 நாள்கள் செய்தாலே போதுமானது.


மாதுளை பழத்தை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் வாதம், பித்தம் ஆகியவற்றை சரி செய்கிறது. மேலும் உடலில் ஏற்படும் வீக்கத்தை சரி செய்கிறது.



ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்படும் போது மாதுளை பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதுளை சாறினை தினமும் காலையில் குடித்து வந்தால் பசியை அதிகரிக்க முடியும். மேலும் இது சிறந்த ஆண்டி-ஆக்ஸிடெண்டுகளாக செயல்பட்டு நச்சுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.


மாதுளை பழச் சாறினை முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் முகம் பிரகாசமாக மாறும்.



தினம் ஒரு மாதுளை பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம்.

No comments:

Post a Comment