இந்தியாவில் கல்விக்காக பெருமளவு செலவு செய்தும் கற்கும் திறன் குறைந்துள்ளது: ஆய்வறிக்கையில் தகவல் - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Saturday 20 April 2019

இந்தியாவில் கல்விக்காக பெருமளவு செலவு செய்தும் கற்கும் திறன் குறைந்துள்ளது: ஆய்வறிக்கையில் தகவல்


இந்தியாவில் கல்விக்காக பெருமளவு செலவு செய்தும் கற்கும் திறன் குறைந்துள்ளது: ஆய்வறிக்கையில் தகவல்


இந்தியாவில் கல்விக்காக பெருமளவு செலவு செய்தும் கற்கும் திறன் குறைந்துள்ளது: ஆய்வறிக்கையில் தகவல் கல்விக்காக பெருமளவு செலவு செய்தபோதிலும் மாணவர்களின் கற்கும் திறன் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 




 கல்வி தொடர்பான அந்த ஆய்வறிக்கையின் விவரம்: பள்ளி நிர்வாகம் சிறந்து விளங்கினாலும், கல்விக்காக பெருமளவு பணம் செலவு செய்தாலும் கற்கும் முறை குறைவாகவே உள்ளது. இதற்கு முதலில் ஆசிரியர்களின் திறமையை வளர்க்க வேண்டும். ஒரே மாதிரியான கல்வி முறை மற்றும் முந்தைய வகுப்பை விட கற்கும் திறனை குறைக்க வேண்டும் என்ற நேக்கம் கொண்டதாகவும் இருக்கிறது. பொதுவாக கல்வி முறை 3 கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. 



 முதலாவதாக, வேலைவாய்ப்புக்காக அறிவு மற்றும் திறமையை மேம்படுத்துவது, இரண்டாவதாக,நடத்தை, மதிப்பு மற்றும் அடையாளத்தை பகிர்வது, மூன்றாவதாக, கல்வித் தகுதி மற்றும் உயர் கல்விக்கான மாணவர்களை தேர்வு செய்வது, தொழிலுக்கேற்ற திறமையை மேம்படுத்துவது என கல்வி முறைகள் பிரிக்கப்பட்டுளன. பாடத் திட்டங்களில் உள்ள குறைபாடுகள் கற்கும் திறன் குறைவுக்கான காரணங்களில் ஒன்று. சுதந்திரத்துக்கு பின் செயல்படுத்தப்படும் நமது கல்வி முறை பொருளாதார மற்றும் தார்மீக ரீதியாக தோல்வியடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு திறன் கட்டமைப்பும் அவசியம். பொருளாதார வளர்ச்சியில் பல லட்சம் குழந்தைகளும், இளைஞர்களும் பங்கேற்க வாய்ப்பு தரவேண்டும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கல்விக்காக பெருமளவு செலவு செய்தும் கற்கும் திறன் குறைந்துள்ளது: ஆய்வறிக்கையில் தகவல்


கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment