கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணப்பொருட்களை பள்ளி மாணவர்களுக்கே வழங்கிய உருவம்பட்டி ஊர்ப் பொதுமக்கள்.... - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Monday 26 November 2018

கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணப்பொருட்களை பள்ளி மாணவர்களுக்கே வழங்கிய உருவம்பட்டி ஊர்ப் பொதுமக்கள்....

அன்னவாசல்,நவ.26: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு வந்த கஜா புயல் நிவாரண பொருட்களை தங்களது ஊரில் உள்ள  பள்ளி மாணவர்களுக்கே வழங்கி அசத்தியுள்ளனர்...


கஜாபுயலினால் தஞ்சை,நாகை,திருவாரூர் ,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது..பாதிக்கப்பட்ட  கிராம ,நகர்புற பகுதிகளுக்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் ,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,தனியார் அமைப்புகள், ஆசிரியர்கள,அரசு ஊழியர்கள்  நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் ..



அந்த வகையில்  கரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் கரூர் குளத்துப்பாளையம் ஸடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களால்  சேரிக்கப்பட்ட 100 கிலோ அரசி,பருப்பு,கோதுமை,ரவை,சீனி,சோப்பு,எண்ணெய்,சேமியா,பிஸ்கெட்,பவுடர், சீனி மற்றும் மருந்துப் பொருட்களை  நிவாரணமாக  உருவம்பட்டி கிராம மக்களுக்கு வழங்கியுள்ளனர்..அதனைப் மகிழ்வோடு பெற்றுக் கொண்ட ஊர்ப்பொதுமக்கள் இந்த நிவாரண பொருட்களை கிராமத்தில் உள்ள அத்தனை குடும்பத்துக்கும் வழங்க இயலாது என்பதால் பள்ளி தலைமையாசிரியர் ஜெ.சாந்தியிடம் வழங்கி பள்ளி மாணவர்களுக்கு  தினமும் பிஸ்கெட் வழங்கும் படியும்,சமையல் பொருட்களை வைத்து  பள்ளியில் நடைபெறும் விழா நாட்களில் கேசரி,சப்பாத்தி,வெஜ்பிரியாணி சமைத்து  வழங்கும் படியும் கேட்டுக்கொண்டனர்..



இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெ.சாந்தி கூறியதாவது: கஜாபுயலினால் உருவம்பட்டி கிராம மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தங்களுக்கு வந்த நிவாரண பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய செயலை நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது..வந்திருந்த பொருட்களில் சோப்பு,பிஸ்கெட்,ஷாம்பு,சீயக்காய்,பற்பசை ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம்..மீதி உள்ள ரவையை வைத்து கேசரி போடவும்,கோதுமை மாவை வைத்து சப்பாத்தி போடவும்,அரிசியை வைத்து வெஜ் பிரியாணி தயார் செய்து மாணவர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளோம்..ஊர்ப்பொதுமக்களும் அது போன்று மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் தயாரிக்க எங்களை அழையுங்கள் நாங்களே எங்களது குழந்தைகளுக்கு சமைத்து தருகிறோம் என மகிழ்வோடு கூறிச்சென்றனர் என்றார் பூரிப்போடு...



நிகழ்ச்சியின் போது பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் க.கருப்பையா மற்றும் ஊர் கிராம நிர்வாகிகள் சி.முத்தன்,

சா.முருகேசன்,

அ.பால்கண்ணு,க.பழனிவேலு மற்றும் ஊர்ப்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

ஏற்பாடுகளை ஆசிரியர் கு.முனியசாமி செய்திருந்தார்..

No comments:

Post a Comment