கஜா பாதிப்பு இன்ஜினியரிங், பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ரத்து - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Saturday 17 November 2018

கஜா பாதிப்பு இன்ஜினியரிங், பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ரத்து


கஜா புயலின் கோர தாண்டவத்தால் தமிழகம் முழுவதும் இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெற விருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று தமிழகத்தில் கரையை கடந்தது. இந்த புயலின் கோர தாண்டவத்தால் புயலின் கண் பகுதி நகர்ந்து சென்ற ஊர்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுதமிழகம் முழுவதும் இயங்கி வரும், இன்ஜினியரிங் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு டிசம்பர் 14ம் தேதி நடைபெறும். 



அதே போல் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளான கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, அழகப்பா இன்ஸ்டிடிட்யூட் ஆப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அன்ட் பிளானிங், குரோம்பேட்டை மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகிய 4 கல்லூரிகளில் வழக்கம் போல் தேர்வு நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று (நவம்பர் 17ம் தேதி) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த தேர்வுகள் அனைத்தும் நவம்பர் 23ம் தேதி நடைபெறும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment