திருச்சியில் நடைபெற்ற யோகா மாநாட்டில் 60 ஆப்பிள்கள் மீது அமர்ந்து பத்மாசனம் செய்து அசத்திய மாணவி - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Saturday 24 November 2018

திருச்சியில் நடைபெற்ற யோகா மாநாட்டில் 60 ஆப்பிள்கள் மீது அமர்ந்து பத்மாசனம் செய்து அசத்திய மாணவி

தமிழக கலை பண்பாட்டுத் துறை மற்றும் ருத்ரசாந்தி யோகாலயா டிரஸ்ட், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், யோகா சாதனையாளர்கள் பங்கேற்கும் 24-வது மாநில அளவிலான 2நாள் மாநாடு திருச்சி அருண் ஓட்டலில் இன்று காலை தொடங்கியது.







இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் வீரலட்சுமி குத்துவிளக்கேற்றினார். தொழிலதிபர் மனோகரன் தலைமை தாங்கினார். செயலாளர் வானசி முன்னிலை வகித்தார். ருத்ரசாந்தி யோகாலயா டிரஸ்ட் நிறுவனரும், மாநாட்டுக்குழு தலைவருமான கிருஷ்ண குமார் வரவேற்று பேசினார்.



மாநாட்டில் 7-ம்வகுப்பு மாணவி , தரையில் வைக்கப்பட்டிருந்த 60 ஆப்பிள்கள் மீது அமர்ந்து பத்மாசனம் செய்து சாதனை படைத்தார். அவரது சாதனையை கண்டு அனைவரும் வியந்து பாராட்டினர். மேலும் அவருக்கு பரிசும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இயற்கை நலவாழ்வு பற்றிய பட்டிமன்றம் நடைபெற்றது. நாளை யோகா மாநாடு நிறைவு பரிசளிப்பு விழா மாலை 4மணிக்கு நடக்கிறது.



இதில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் குணசேகரன் கலந்து கொண்டு பரிசு வழங்குகிறார்.

No comments:

Post a Comment