குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்..! - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Tuesday 13 November 2018

குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்..!

குளிர்காலத்தில் தவறாமல் கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கப்படும். அதற்காக மிகுந்த எண்ணெய் பசை கொண்ட மாய்சுரைசரைப் பயன்படுத்தாமல், ஜெல் அல்லது க்ரீம் வகை மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவது சிறந்தது.



•• குளிர்காலத்தில் தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் சரும செல்களுக்கு ஊட்டம் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட செல்களும் புத்துயிர் பெறும்.



•• குளிர்காலத்தில் பலரும் நல்ல சூடான நீரில் குளிக்கத் தான் விரும்புவோம். ஆனால் சுடுநீர் சரும வறட்சியை அதிகரிக்கும். எனவே வெதுவெதுப்பான நீரையே எப்போதும் பயன்படுத்த வேண்டும்.



•• குளிர்காலத்தில் தவறாமல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும். அதிலும் ஓட்ஸ், காபி பவுடர் போன்றவற்றைக் கொண்டு ஸ்கரப் செய்வது மிகவும் நல்லது.



•• கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளான நட்ஸ், மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை வயிற்று உப்புசத்தையும், முகப்பருக்களையும் உண்டாக்கும்.

No comments:

Post a Comment