சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக செல்லிடப்பேசி எண்: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறிமுகம் - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Saturday 17 November 2018

சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக செல்லிடப்பேசி எண்: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறிமுகம்


சர்க்கரை நோயாளிகள் தங்களது சிகிச்சை குறித்து ஆலோசனை பெறும் வகையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரத்யேக செல்லிடப்பேசி எண் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.



உலக சர்க்கரை தினத்தையொட்டி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான உதவி எண் தொடக்க விழா, சர்க்கரையில் ரத்தத்தின் அளவைக் கண்டறியும் இலவச டிஜிட்டல் கருவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.




இதில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மருத்துவமனையின் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த நீல நிற மின் விளக்குகளை இயக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக உதவி எண் சேவை, சர்க்கரையில் ரத்த அளவைக் கண்டறியும் இலவச டிஜிட்டல் கருவி ஆகியவற்றை வழங்கிஅமைச்சர் பேசியது:



ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவில் நாள்தோறும் 800 -க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 30 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளிலேயே முதன்முதலாக சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக உதவி எண் சேவை இங்கு தொடங்கப்பட்டுள்ளது. 99626 72222 என்ற செல்லிடப்பேசி எண்ணில் சர்க்கரை நோயாளிகள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு சிகிச்சை தொடர்பான ஆலோசனை பெறலாம் என்றார் அமைச்சர். 



இந்நிகழ்ச்சியில், சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்தி, சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் தர்மராஜன், பேராசிரியர் டாக்டர் பெரியாண்டவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment