World Radio Day Feb 13th - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Wednesday 13 February 2019

World Radio Day Feb 13th

இன்று உலக வானொலி தினம்

World Radio Day Feb 13th


ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.





📻கடந்த 2011-ம் ஆண்டு ஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

📻அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது..


📻நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA)முன்னோடி வானொலி தான்.

 📻 தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது.

      📻ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.

   📻 ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்,மைக்கேல் பாரடே இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை ,ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர்.

 📻 இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர், மின்காந்த அலைகளை ,டிரான்ஸ்மீட்டராக மாற்றினார்.
World Radio Day Feb 13th
📻           பின்னர்,இயற்பிலுக்கான நோபல் பரிசு (1909) பெற்ற இத்தாலியைச் சேர்ந்த கூலில்மோ மார்கொனி, (1874-1937) வானொலியை கண்டறிந்தார்.


     📻இன்று உலக முழுவதும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

       📻இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட செய்தியை, 1947-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய பிரிட்டன் பிரதமராக இருந்த சர். க்ளமன்ட் அட்லி,(1945-1951) வானொலி வாயிலாக அறிவித்ததை, இந்தியர்கள் கேட்டறிந்ததாக சொல்கிறார்கள்.

www.kalvidheebam.com

📻 முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி.

📻அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது.

📻ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாட உள்ளனர்.

 📻உலக வானொலி தினத்தை முன்னிட்டு ஐ.நா.பொதுச்செயலர்  விடுத்துள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் தகவலினை செலவின்றி கொண்டு செல்லும் மதிப்புமிக்க சாதனம் வானொலி என கூறியுள்ளார்.
World Radio Day Feb 13th
கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment