History Today - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Friday 15 February 2019

History Today

வரலாற்றில் இன்று 15.02.2019


பெப்ரவரி 15 கிரிகோரியன் ஆண்டின் 46 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 319 (நெட்டாண்டுகளில் 320) நாட்கள் உள்ளன. 






 நிகழ்வுகள் கிமு 399 – மெய்யியலாளர் சோக்கிரட்டீஸ் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். 590 – பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொஸ்ராவு முடி சூடினான். 1637 – புனித ரோம் பேரரசின் மன்னனாக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினான். 1898 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் USS Maine கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது. 1920 – யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது. 1942 – இரண்டாம் உலகப் போர்: 




சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர். 1946 – ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது. 1950 – சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. 1961 – பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து அமெரிக்க Figure Skating வீரர்கள் உட்பட 73 பேர் கொல்லப்ப்பட்டனர். 1970 – டொமினிக்கன் குடியரசு விமானம் ஒன்று சாண்டோ டொமிங்கோவில் கடலில் மூழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர். 






1989 – ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. 1994 – ரஷ்யா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது. 1996 – சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர். 1999 – குர்டிஸ்தான் தீவிரவாதத் தலைவர் அப்துல்லா ஓக்கலன் துருக்கிய இரகசியப் படைகளினால் கென்யாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். 2005 – யூடியூப் சேவை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. 





 பிறப்புகள் 1564 – கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1642) 1845 – எலீஹு ரூட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1937) 1861 – ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (இ. 1947) 1861 – சார்ல்ஸ் கில்லோம், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர், (இ. 1938) 1873 – ஹான்ஸ் இயூலர்-செல்ப்பின், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர், (இ. 1964) 1922 – டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் முன்னாள் சனாதிபதி 1949 – அனுரா பண்டாரநாயக்கா, இலங்கையின் அரசியல்வாதி (இ. 2008) 1956 – டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாளர். 1984 – மீரா ஜாஸ்மின், மலையாளத் திரைப்பட நடிகை இறப்புகள் 1973 – அழகு சுப்பிரமணியம், ஆங்கில எழுத்தாளர், 






இலங்கையர். (பி. 1915) 1974 – கொத்தமங்கலம் சுப்பு, எழுத்தாளர், நடிகர் (பி. 1910) 1988 – ரிச்சார்ட் பெயின்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1918) 1999 – ஹென்றி கென்டால், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1926) கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment