வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்..!! (Voter List) - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Friday 1 February 2019

வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்..!! (Voter List)

வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்..!! இந்தியத் தேர்தல் ஆணையம் தயார் செய்யும் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்களின் பெயர் இடம் பெற்றிருக்கும். 








குறிப்பாக, வரப்போகும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும். ஆனால், சில நேரங்களில் வாக்கு சாவடிக்குச் சென்ற பின்னர்தான் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலிலேயே பெயர் இல்லாததை வாக்களர்கள் அறிந்துகொள்வார்கள். இதனால்தான், உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை வாக்காளர்கள் தேர்தல் நேரம் நெருங்கும் போது தெரிந்து கொள்வது அவசியம். 




 எப்படி பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்? இன்று ஜனவரி 31-ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வாக்காளர் பெயர்ப் பட்டியலை வெளியிடும். அதனால், இந்தியக் குடிமக்கள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம். 



 1. National Voters' Service Portal என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும்.  



2. இடப்புறம் உள்ள search ஆப்ஷன் மூலம் உங்களது பெயரை டைப் செய்து பெயர் இடம்பெற்றுள்ளதா எனப் பாருங்கள். இதில் search ஆப்ஷனைக் கிளிக் செய்தவுடன் தோன்றும் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாக நிரப்பவும். 




 3. இதன் மூலம் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment