Google Assistant - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Thursday 14 February 2019

Google Assistant

கூகுள் அசிஸ்டண்ட்-இன் டிரான்ஸ்லேட் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?


கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் மொழிமாற்றம் செய்வதற்கான வசதியை கூகுள் வழங்க துவங்கியுள்ளது. கூகுள் ஹோம் ஸ்பீக்கர், ஸ்மார்ட் டிஸ்ப்ளே அல்லது பில்ட்-இன் கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்ட சாதனங்களில் இந்த வசதியை காண முடியும்.






 புதிய வசதியை கூகுள் இன்டர்பிரெட்டர் மோட் என அழைக்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆங்கிலம், பிரன்ச், ஜெர்மன், இத்தாலியன், ஜப்பான் அல்லது ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் பயன்படுத்த முடியும். பின் இந்த மோட் கொண்டு செக், தட்சு, தானிஷ், ஆங்கிலம், ஃபின்னிஷ், ஃபிரன்ச், ஜெர்மன், கிரீக், இந்தி, ஹங்கேரியன், இந்தோனேசியன், இத்தாலியன், ஜப்பானிஸ், கொரியன், மேண்டரின், போலிஷ், போர்த்துகீசு, ரோமானியன், ரஷ்யன், ஸ்லோவேக், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், தாய், தர்கீஷ், உக்ரேனியன் மற்றும் வியட்நாமீஸ் உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யலாம். கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் இன்டர்பிரெட்டர் மோட் இயக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம். 




 1 - முதலில் "Ok Google" என டைப் செய்ய வேண்டும். 


 2 - இனி - Be my Italian interpreter. | - Help me speak Spanish | - Interpret from Polish to Dutch | - Chinese interpreter | - Turn on interpreter mode உள்ளிட்ட கமாண்ட்களில் ஒன்றை பேசவும். 


 3 - ஒருவேளை மொழி கண்டறியப்படவில்லை எனில், நீங்கள் பயன்படுத்த வேண்டிய மொழியை தேர்வு செய்யவும். 




 4 - டோன் கேட்டதும், நீங்கள் பேச துவங்கலாம். 




 5 - இன்டர்பிரெட்டர் மோட் இயங்க நீங்கள் மொழிகளிடையே மாற வேண்டிய அவசியம் இல்லை. இன்டர்பிரெட்டர் மோட் பயன்படுத்த வேண்டாமெனில், நீங்கள் Stop, Quit அல்லது Exit என கூற வேண்டும். ஸ்மார்ட் டிஸ்ப்ளே வசதி கொண்டவர்கள் மொழி மாற்றம் செய்யப்பட்ட உரையாடலை கேட்கவும், பார்க்கவும் முடியும். 






இந்த அம்சம் முன்னதாக சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா 2019 இல் அறிமுகம் செய்யப்பட்டது. இதே நிகழ்வில் கூகுள் நிறுவனம் அசிஸ்டண்ட் கனெக்ட் வசதியை அறிவித்தது. சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த சேவையை கொண்டு அசிஸ்டண்ட் அம்சத்தை மிக எளிமையாக வழங்க முடியும். 





இதன் மூலம் கூகுள் தனது சேவையை பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட் சாதனங்களில் வழங்க முடியும். இதுதவிர கூகுள் அசிஸ்டண்ட் வசதி கூகுள் மேப்ஸ் சேவையிலும் வழங்கப்பட இருப்பதாக கூகுள அறிவித்துள்ளது.
கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment