History Today 27.02.2019 - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Wednesday 27 February 2019

History Today 27.02.2019

கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.


இன்றைய தினம் : 2019 பிப்ரவரி 27
கிரிகோரியன் ஆண்டு : 58ஆம் நாளாகும்.
ஆண்டு முடிவிற்கு  : 307 நாட்கள் உள்ளன.




இன்றைய தின நிகழ்வுகள்:
1560 – இசுக்கொட்லாந்தில் இருந்து பிரான்சியரை வெளியேற்ற இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1594 – பிரான்சின் மன்னனாக நான்காம் என்றி முடிசூடினார்.
1700 – புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்காவில் போரைத் தொடர்வதற்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் வாக்களித்தது.
1801 – வாஷிங்டன், டிசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
1844 – டொமினிக்கன் குடியரசு எயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1861 – போலந்தில் உருசிய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதில், ஐந்து பேர் உருசியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1898 – கிரேக்க மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
1900 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையயின்றி சரணடைவதாக அறிவித்தார்.



1900 – பிரித்தானிய தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.
1902 – இரண்டாம் பூவர் போர்: ஆத்திரேலிய இராணுவத்தினர் இருவர் போர்க்குற்றங்களுக்காக பிரிட்டோரியாவில் தூக்கிலிடப்பட்டனர்.
1933 – பெர்லினில் செருமனியின் நாடாளுமன்றக் கட்டடம் இடச்சு கம்யூனிஸ்டுகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
1940 – ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சாவகக் கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை சப்பான் படைகள் தோற்கடித்தன.
1943 – அமெரிக்காவின் மொன்ட்டானாவில் பெயர்கிரீக் நகரில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 74 பேர் கொல்லப்பட்டனர்.
1951 – ஐக்கிய அமெரிக்காவில் அரசுத்தலைவர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
1976 – முன்னாள் எசுப்பானிய நாடான மேற்கு சகாரா சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.
1991 – வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவெய்த் விடுதலையானதாக அறிவித்தார்.
2002 – கோத்ரா தொடருந்து எரிப்பு: அயோத்தியாவில் இருந்து தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முசுலிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.



2004 – பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் அபு சயாப் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.
2010 – சிலியில் 8.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 500 பேர் உயிரிழந்தனர்.
2015 – உருசிய அறிவியலாளரும், அரசியல்வாதியுமான போரிசு நெம்த்சோவ் கிரெம்லின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்றைய தின பிறப்புகள்:
272 – முதலாம் கான்ஸ்டன்டைன், உரோமைப் பேரரசர் (இ. 337)
1807 – ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ, அமெரிக்கக் கவிஞர் (இ. 1882)
1897 – பெர்னார்டு இலியோத், பிரான்சிய வானியலாளர் (இ. 1952)
1902 – லூசியோ கோஸ்தா, பிரான்சிய-பிரேசில் கட்டிடக்கலைஞர் (இ. 1998)
1903 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979)
1912 – குசுமாகரசு, இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1999)
1926 – டேவிட் ஹண்டர் ஹியூபெல், நோபல் பரிசு கனடிய உடலியங்கியலாளர், நரம்பியலாளர்
1932 – எலிசபெத் டெய்லர், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை (இ. 2011)
1934 – ரால்ஃப் நேடர், அமெரிக்க அரசியல்வாதி, செயற்பாட்டாளர்
1943 – பி. எஸ். எடியூரப்பா, இந்திய அரசியல்வாதி
1962 – இராபர்ட் ஸ்பென்சர், அமெரிக்க எழுத்தாளர்
1975 – கிறிஸ்டோபர் பி. லாண்டன், அமெரிக்க இயக்குநர்
1977 – ஜேம்ஸ் வான், மலேசிய-ஆத்திரேலிய இயக்குநர்
1982 – புருனோ சோரெசு, பிரேசிலிய டென்னிசு வீரர்
1983 – முகமது நபௌசு, லிபிய ஊடகவியலாளர் (இ. 2011)
1986 – சந்தீப் சிங், இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்
இன்றைய தின இறப்புகள்:
1712 – முதலாம் பகதூர் சா, முகலாயப் பேரரசர் (பி. 1643)
1906 – சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே, அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1834)
1931 – சந்திரசேகர ஆசாத், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1906)
1936 – இவான் பாவ்லோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (பி. 1849)
1939 – நதியெஸ்தா குரூப்ஸ்கயா, உருசியப் புரட்சியாளர், அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1869)
1956 – கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர், இந்திய அரசியல்வாதி (பி. 1888)
1983 – நிகோலாய் அலெக்சாந்திரோவிச் கொசூரேவ், உருவிய வானியலாளர், வானியற்பியலாளர் (பி. 1908)
1993 – லில்லியன் கிஸ், அமெரிக்க நடிகை (பி. 1893)
1998 – ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருந்தியலாளர் (பி. 1905)
2005 – புகழேந்தி, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1929)
2008 – சுஜாதா, தமிழக எழுத்தாளர் (பி. 1935)
2010 – நானாஜி தேஷ்முக், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1916)
2012 – வேலூர் ஜி. ராமபத்ரன், தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. 1929)
2014 – ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (பி. 1929)
2015 – போரிசு நெம்த்சோவ், உருசிய அரசியல்வாதி (பி. 1959)
இன்றைய தின சிறப்பு நாள்:
மராட்டி மொழி நாள் (மகாராட்டிரம்)
விடுதலை நாள் (டொமினிக்கன் குடியரசு, எயிட்டியிடம் இருந்து 1844)
பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்

No comments:

Post a Comment