Education Tour to Singapore: 32 school students selected - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Sunday 17 February 2019

Education Tour to Singapore: 32 school students selected


பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 32 மாணவ, மாணவிகள் சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி கல்வித் துறை, சென்னை கிழக்கு ரோட்டரி கிளப், சிறப்பு தொழிற்பயிற்சிக்கான அறக்கட்டளை அமைப்பு ஆகியவை இணைந்து "ஜ்ண்ய்ஞ்ள் ற்ர் ச்ப்ஹ்' என்ற திட்டத்தின்கீழ் மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு அறிவியல் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றிபெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். 






இத்திட்டத்தின்படி, கடந்த 2016-இல் மலேசியாவுக்கும், 2017-இல் ஜெர்மனிக்கும், 2017-18-இல் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கும் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின்படி, 2018-19 கல்வி ஆண்டில் சிங்கப்பூர் கல்விச் சுற்றுலாவுக்கான மாணவர்களின் முதற்கட்டத் தேர்வு 70 உயர்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட 7 ஆயிரம் மாணவர்களில் 280 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான இறுதிப் போட்டி ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் வெள்ளிக்கிழமை (பிப். 15) நடைபெற்றது. 






இதில், சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா செல்ல 32 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். ரூ. 10 லட்சம் நிதி: இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள 2 உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உணவு, கல்வி பயன்பாட்டுக்காக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை சென்னை கிழக்கு ரோட்டரி கிளப், சிறப்பு தொழிற்பயிற்சிக்கான அறக்கட்டளை அமைப்பின் நிர்வாகிகள் ஆணையர் தா.கார்த்திகேயனிடம் வழங்கினர். 






சிங்கப்பூர் துணை தூதரகப் பிரதிநிதி இவான் டோன், சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் பாபு பிரேம், விங்ஸ் டு பிளை அமைப்பின் தலைவர் வி.ஆர்.ஷாகித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment