History Today 16.02.2019 - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Saturday 16 February 2019

History Today 16.02.2019

வரலாற்றில் இன்று👈
👈 🌸 பிப்ரவரி 16 🌸 (Today in History for 16th February) 🌸



நிகழ்வுகள்

1568 – நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1646 – இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.

1796 – ஆங்கிலேயர் கொழும்பை டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.

1838 – தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடாத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.

1918 – லித்துவேனியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1937 – வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படைகள் பிலிப்பீன்சின் கொரெகிடோர் தீவில் தரையிறங்கினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: முதல் தடவையாக அமெரிக்கப் போர் விமானம் டோக்கியோவைத் தாக்கியது.

1945 – அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.

1947 – 80 ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.

1956 – மரண தண்டனையை ஒழிக்கும் சட்டத்தைப் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

1959 – ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.

1961 – எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது.

1980 – இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது.

1980 – உலகிலேயே மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் பிரான்சில் ஏற்பட்டது. Lyon நகரிலிருந்து வடக்கில் பாரிசை நோக்கி 175 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையில் வாகனங்கள் நின்று விட்டன.

1983 – ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 71 பேர் கொல்லப்பட்டனர்.

1985 – ஹெஸ்புல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1986 – சோவியத் கப்பல் மிகைல் லெர்மொண்டொவ் நியூசிலாந்தில் மூழ்கியது.

1988 – சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

2005 – கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.

2007 – 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த மூவருக்கு தூக்குத்தண்டனயும்

 மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

            🌸 பிறப்புகள் 🌸

1934 – தெளிவத்தை ஜோசப், ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர்.

1976 – அக்ஷய், ஜப்பனீஸ் பாடகர்.

                 🌸 இறப்புகள் 🌸

1656 – தத்துவ போதக சுவாமிகள் (றொபேட் டீ நொபிலி), ரோமைச் சேர்ந்த கத்தோலிக்கக் குரு, தமிழ்நாட்டில் சமயப்பணி ஆற்றியவர் (பி. 1577)

1885 – வீ. இராமலிங்கம், ஈழத்துப் புலவர்.

1907 – ஜியோசு கார்டூச்சி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1835)

1932 – பெர்டினண்ட் புயிசோன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1841)

1944 – தாதாசாஹெப் பால்கே, இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடி (பி. 1870)

1954 – டி. கே. சிதம்பரநாதன், இரசிகமணி

1988 – விஜய குமாரதுங்க, சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1945)

              🌸 சிறப்பு நாள் 🌸

லித்துவேனியா – விடுதலை நாள் (1918)

தாதா சாகேப் பால்கே (பிப்.16- 1944)

தாதா சாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.

இவர்  நாசிக்கில் 1870-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார். 1885-ம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன.

பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.

இவர் தனது 73-வது வயதில் 1944-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி இயற்கை எய்தினார்.
அவருடைய நினைவாக தாதா சாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.

👉 🌴🌴🌴🌸🌸🌸🌴🌴🌴👈
🌸 கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment