ஐஐடி மாணவர், முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய புதிய தொழில்நுட்பங்கள், பொருட்கள் கண்காட்சி: இன்ஜினியரிங் மாணவர்கள் ஆர்வம் - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Sunday 17 February 2019

ஐஐடி மாணவர், முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய புதிய தொழில்நுட்பங்கள், பொருட்கள் கண்காட்சி: இன்ஜினியரிங் மாணவர்கள் ஆர்வம்

சென்னை ஐஐடியில் நேற்று ஐஐடி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய பொருட்களின் கண்காட்சி நடந்தது. ஐஐடி, தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைந்து உருவாக்கிய புதிய தொழில்நுட்பம், ஐஐடி முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கிய பொருட்கள் கண்காட்சி சென்னை ஐஐடி ரிசர்ச் பார்க் வளாகத்தில் நேற்று நடந்தது. 





இதில் 100க்கும் அதிகமான புதிய தொழில்நுட்பத்தினால் ஆன பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். அதே போல் இன்ஜினியரிங் மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த புதிய சாதனங்கள் தொடர்பாக கேட்டறிந்தனர். 




ஐஐடி இன்குபேசன் சென்டர் இணை தலைவர் அசோக் ஜுன்ஜுன்வாலா பேசுகையில், ''சென்னை ஐஐடி ரிசர்ச் பார்க் லாபநோக்கமற்ற ஒரு நிறுவனம். சென்னை ஐஐடி சார்பில் இந்த நிறுவனம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி இன்குபேட்டர் செல் மூலம் 60 முதல் 70 நிறுவனங்கள் உருவாகின்றன. இந்த எண்ணிக்கை விரைவில் 100ஐ தொடும்'' என்றார்.




கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment