Infosys - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Sunday 17 February 2019

Infosys

இன்ஜினியரிங் மாணவர்களை வேலைக்கு தகுதியானவர்களாக உருவாக்கும் வகையில், இன்போசிஸ் நிறுவனம் டிஜிட்டல் முறையிலான இ கோர்ஸ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூருவில் நேற்று முன்தினம் `இன்பை டி கியூ' என்ற `ஆப்' அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 300 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 




இந்த ஆப் மூலம் கல்லூரியில் படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்கள் பதிவு செய்து கொண்டால் அவர்கள் தங்கள் படிப்பை முடித்ததும் வேலைக்கு முழு தகுதி பெறும் வகையில் பல்வேறு செய்முறை பயிற்சி வழங்கப்படும். 3ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு மாணவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இலவசமாக அளிக்கப்படும் இந்த பயிற்சி முடிந்தம் இன்ேபாசிஸ் நிறுவனம் சான்றிதழும் வழங்குகிறது. 




நிகழ்ச்சியில் பேசிய இன்போசிஸ் நிறுவன சிஓஓ பிரவீன் குமார் கூறுகையில், இன்போசிஸ் நிறுவனம் சர்வதேச அளவில் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இன்ஜினியரிங் மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையிலான இ கோர்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஜினியரிங் முடித்த பலருக்கும் வேலைக்கு தகுதியானவர்களாக உருவாக்கும் வகையில் இந்த பயிற்சி படிப்பு இருக்கும் என்றார். 


கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment