IRCTC - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Wednesday 13 February 2019

IRCTC

ஐ.ஆர்.சி.டி.சி.யில் முன்பதிவு செய்த டிக்கெட்டை மற்றவர்களுக்கு மாற்றிக் கொடுப்பது எப்படி?





ஐ.ஆர்.சி.டிசி. வலைதளம் கொண்டு ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில சமயங்களில் தவறு செய்வது இயல்பான ஒன்று தான். இவ்வாறு தவறு செய்வோருக்கு சவுகரியமான அம்சம் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு யாருக்கேனும் மாற்றிக் கொடுக்க வேண்டுமா? 




 ஐ.ஆர்.சி.டி.சி. அதன் பயனர்களுக்கு அவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை மற்றவர்களுக்கு மாற்றிக் கொடுக்கும் வசதியை வழங்குகிறது. எனினும், இந்த வசதியை பயனர்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். 





இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம். முன்பதிவு செய்த டிக்கெட் 



1 - நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டினை பிரின்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும். 


2 - இனி உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். 


 3 - ரெயில் டிக்கெட் முன்பதிவு மையத்திற்கு செல்லும் போது மாற்ற வேண்டிய பயணியின் அடையாள சான்று மற்றும் அதன் ஜெராக்ஸ் ஒன்றையும் எடுத்து செல்ல வேண்டும். 



 4 - இனி டிக்கெட் முன்பதிவு மையத்தின் அதிகாரியிடம் பயணியின் பெயரை மாற்றித் தர கேட்க வேண்டும். குறிப்பு: இவ்வாறு செய்ய பயனர் டிக்கெட் முன்பதிவு மையத்திற்கு ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக செல்ல வேண்டும். கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment