வரலாற்றில் இன்று History Today 02/02/2013 - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Saturday 2 February 2019

வரலாற்றில் இன்று History Today 02/02/2013

பிப்ரவரி 2 கிரிகோரியன் ஆண்டின் 33 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் 333) நாட்கள் உள்ளன.








🔵நிகழ்வுகள்

🖌1509 – போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.

🖌1790 – வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

🖌1812 – கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது.

🖌1822 – இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.

🖌1848 – மெக்சிக்கோவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

🖌1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.

🖌1878 – துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.

🖌1880 – முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன.

🖌1897 – பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது.

🖌1899 – ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

🖌1901 – விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.

🖌1908 – 60ள ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு.

🖌1920 – எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

🖌1933 – ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார்.

🖌1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி ஜேர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.

🖌1946 – ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.

🖌1971 – உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் இடி அமீன் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்தார்.

🖌1972 – டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

🖌1982 – சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

🖌1989 – ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின.

🖌1989 – செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.

🖌1998 – பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.

🔵பிறப்புகள்

🖌1522 – லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணித ஆய்வாளர் (இ. 1565)

🖌1871 – பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931)

🖌1882 – ஜேம்ஸ் ஜோய்ஸ், ஐரிய எழுத்தாளர் (இ. 1941)

🖌1915 – குஷ்வந்த் சிங், இந்திய எழுத்தாளர் (இ. 2014)

🖌1924 – வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (இ. 1989)

🖌1977 – ஷக்கீரா, கொலம்பியப் பாடகி
1985 – உபுல் தரங்க, இலங்கை துடுப்பாட்ட வீரர்

🔵இறப்புகள்

🖌1907 – திமீத்ரி மென்டெலீவ், ரஷ்ய வேதியியலாளர் (பி. 1834)

🖌1970 – பேட்ரண்ட் ரசல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1872)

🖌1980 – வில்லியம் ஸ்டெயின், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)

🖌1987 – அலிஸ்ரர் மக்லீன், ஆங்கில எழுத்தாளர் (பி. 1922)

🔵சிறப்பு தினம்

🖌உலக சதுப்பு நில நாள்

கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment