மாதிரி தேர்வு: கல்வித்துறை உத்தரவு - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Tuesday 1 January 2019

மாதிரி தேர்வு: கல்வித்துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும், மார்ச், ஏப்., மாதம் நடக்கிறது. 





தேர்வுக்கு இரண்டு மாதமே உள்ள நிலையில், பெரும்பாலான பள்ளிகளில் பாடம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. பிப்., முதல் திருப்புதல் தேர்வு துவங்குகிறது. இந்நிலையில், பொதுத்தேர்வு போன்று மாதிரி தேர்வை பள்ளிகளில் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கல்வித்துறை சுற்றறிக்கை:ஒவ்வொரு பாடத்துக்குஒரு நாள் வீதம் பள்ளிகளில் மாதிரி பொது தேர்வுநடத்த வேண்டும். வினாத்தாளை வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர் தயாரித்து, உடனுக்குடன் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மாணவருக்கு வழங்க வேண்டும்.பாட வாரியாக பின்தங்கியுள்ள மாணவரை கண்டறிந்து சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். கல்வியில் பின் தங்கும் மாணவ, மாணவியர் மீது சிறப்பு கவனம் செலுத்திடுதல் அவசியம். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment