அரசு நடத்தும் நீட் பயிற்சி வகுப்பினை சிறப்பான முறையில் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சென்னை துணை இயக்குநர்(மின்ஆளுமை)ஏ.அனிதா மாணவர்களுக்கு அறிவுரை. - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Monday 31 December 2018

அரசு நடத்தும் நீட் பயிற்சி வகுப்பினை சிறப்பான முறையில் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சென்னை துணை இயக்குநர்(மின்ஆளுமை)ஏ.அனிதா மாணவர்களுக்கு அறிவுரை.

அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு சார்பில் நடைபெற்றுவரும்  நீட் பயிற்சி வகுப்பினை சென்னை துணைஇயக்குநர்(மின்ஆளுமை)ஏ.அனிதா எவ்வித முன்அறிவிப்பும் இன்றி பார்வையிட்டு திடீர்  ஆய்வு செய்து நீட் பயிற்சிபெறும் மாணவர்களிடையே அறிவுரைகளை வழங்கி பேசும்போது கூறியதாவது, 







உங்களை போன்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவக்கல்வி பயின்று உயர்ந்த இடத்தை அடையவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழக அரசு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சியினை சிறப்பான முறையில் நடத்திவருகிறது. நீங்கள் சிறப்பாக நீட்  பயிற்சியினை பெறும் நோக்கில் சென்னையில் இருந்து செயற்கைக்கோள் வாயிலாக சிறந்த பாடவல்லுனர்களைக்கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும் உங்களுக்கு அவ்வப்போது ஏற்படுகின்ற சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு சிறந்த பாட ஆசிரியர்களை கொண்டு உங்களுக்கு வழிகாட்டுதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு என்னைப்போன்று அரசுப்பள்ளிகளில் படித்த பலர் அரசின் உயர்பதவியில் உள்ளனர். குறிப்பாக முயற்சியும்,தன்னம்பிக்கையும் இருந்தால் ஒருவர் எத்தகைய உயர் பதவியினையும் அடையலாம். உங்களுக்கு அரிய வாய்ப்பாக உங்களது மாவட்டத்திலேயே மருத்துவக்கல்லூரியினை அரசு கொண்டுவந்துள்ளது.







எனவே நீங்கள் அனைவரும் இந்த நீட் பயிற்சி வகுப்பினை  சிறப்பான முறையில் நன்கு பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக பயிற்சி பெற்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் படிக்கக்கூடிய வாய்ப்பினை பெற வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்.எனவே அரசு நடத்தும் நீட் பயிற்சி வகுப்பினை சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அதிகாரியின் ஆய்வின்போது பள்ளியின்  சுவாமிநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment