கல்லுாரியில் 'ஆன்-லைன்' கல்வி வரும் கல்வியாண்டில் அறிமுகம் Introducing the ONLINE education in the college - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Thursday 31 January 2019

கல்லுாரியில் 'ஆன்-லைன்' கல்வி வரும் கல்வியாண்டில் அறிமுகம் Introducing the ONLINE education in the college

கல்லுாரியில் 'ஆன்-லைன்' கல்வி வரும் கல்வியாண்டில் அறிமுகம் Introducing the ONLINE education in the college மத்திய அரசின், ஸ்வயம்' திட்டத்தில், அரசு கலை கல்லுாரியில்,'ஆன்-லைன்' கல்வி, வரும் கல்வியாண்டு முதல் அறிமுகமாகிறது.




மத்திய அரசின் 'ஸ்வயம்' திட்டத்தில், 1,082 'ஆன்-லைன்' படிப்புகள் உள்ளன. தற்போது, 58 படிப்புகளை, பல்கலை, கல்லுாரிகளில் நடைமுறைப்படுத்தலாம் என, பல்கலை மானியக்குழு பட்டியல் வெளியிட்டுள்ளது.இப்பாடப்பிரிவுகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 




தவிர, அனைத்து கல்லுாரிகளிலும் ஸ்வயம் ஒருங்கிணைப்பாளர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சூழலில், கோவை அரசு கலை கல்லுாரியில் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், ஆன்-லைன்' படிப்புகளை வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.அரசு கலை கல்லுாரி முதல்வர் சித்ரா கூறுகையில், ''ஸ்வயம் திட்டத்தில், 'ஆன்-லைன்' படிப்புகள் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 




அரசு கல்லுாரி மாணவர்களுக்கு எவ்வித செலவுமின்றி, இப்படிப்பை தொடர என்ன செய்யலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.''நுாலகத்தில் இதற்கான வசதி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிப்., இறுதிக்குள் கல்லுாரி கவுன்சில் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும். அடுத்த கல்வியாண்டில், ஆன்-லைனில் என்னென்ன படிப்பு உள்ளது என்ற அறிவிப்பு வெளியிடப்படும்,'' என்றார்.கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment