பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து: தமிழக அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்! - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Wednesday 30 January 2019

பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து: தமிழக அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

சிறுபான்மை பள்ளிகளுக்குஅந்தஸ்து வழங்குவது தொடர்பான தமிழக அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த2018 ஏப்ரல் 5ம் தேதி தமிழகத்தில் சிறுபான்மை பள்ளிகள் அந்தஸ்து தொடர்பாகதமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. 




பள்ளிகளில் 50% சிறுபான்மையின மாணவர்களை சேர்த்தால் அந்த பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் ஆணையை ரத்து செய்துசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளுக்குசிறுபான்மை அந்தஸ்து வழங்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லைஎனவும் தெரிவித்துள்ளது. 




தமிழக அரசாணையை எதிர்த்து சுமார் 140 கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment