வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு இருக்காது!' புதிய 'சாப்ட்வேரில்' பணி தீவிரம் - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Tuesday 1 January 2019

வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு இருக்காது!' புதிய 'சாப்ட்வேரில்' பணி தீவிரம்

தேர்தல் கமிஷன் உருவாக்கிய, புதிய 'சாப்ட்வேர்' மூலம், வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி, வேகப்படுத்தப்பட்டுள்ளது.




இந்தாண்டு ஏப்., மே மாதங்களில் 'லோக்சபா' தேர்தல் நடக்கும் என்பதால், தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியல் தயாரிப்பில், புதிய வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும், பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பட்டியலை செம்மைப்படுத்த வசதியாக, 'இ.ஆர்.ஓ., -நெட்' என்ற புதிய 'சாப்ட்வேர்' உருவாக்கப்பட்டுள்ளது.சோதனை முறையில், புதிய 'சாப்ட்வேர்' பயன்படுத்திய போது, தமிழக அளவில், 10 லட்சம் வாக்காளர் பெயர், இரண்டு முறை பதிவாகியுள்ளது தெரிந்தது. வாக்காளர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயரில், வேறு குறியீடுகள் இணைந்து, பிழையாக இருப்பதும் தெரியவந்துள்ளது.'லோக்சபா' தேர்தல் நடக்க இருப்பதால், உடனடியாக இரட்டை பதிவுகளையும், (லாஜிக்கல்) அடிப்படை பிழைகளையும் திருத்தம் செய்ய உத்தரவிடப்பட்டது. 





அதன்படி புதிய 'சாப்ட்வேர்' மூலமாக, பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, முடுக்கிவிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரி பழனிசாமியிடம் கேட்டபோது, ''தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, புதிய 'சாப்ட்வேர்' மூலம், பட்டியல் செம்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. வாக்காளர் இறுதி பட்டியலில் வெளியாவதில் சில நாட்கள் தாமதம் ஏற்படும். சட்டசபை தொகுதி வாரியாக, சரிபார்ப்பு பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அறிவிக்கும் நாளில், இறுதி பட்டியல் வெளியிடப்படும்,'' என்றார். கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment