தற்காலிக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதியும் இல்லை, எந்த அமைப்பும் இல்லை..! அதிர்ச்சியில் புதிய ஆசிரியர்கள்..! - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Monday 28 January 2019

தற்காலிக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதியும் இல்லை, எந்த அமைப்பும் இல்லை..! அதிர்ச்சியில் புதிய ஆசிரியர்கள்..!

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி சேவை பாதிக்கப் பட்டுள்ளது. 




 இதற்கு மாற்றாக, 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி புரிய ஏராளமானோர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். பி.எட்., எம்.பில். படித்த ஆயிரக் கணக்கான பட்டதாரிகள் இந்த தற்காலிக வேலைக்காக உற்சாகத்துடன் ஆர்வமாக, பணியில் சேர்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு, தர வேண்டிய தொகுப்பூதியம், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பணத்திலிருந்து தரப்படும், என்று அரசு அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் மாநில அளவிலான, பெற்றோர் ஆசிரியர் சங்கம் செயல்படவில்லை, என்று கூறப்படுகிறது. 




அரசுப் பள்ளியில் சேரும் மாணவர் ஒவ்வொருவரிடமும், இதற்காக, வருடத்திற்கு, 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஆனால், தற்போது, அந்தத் தொகை மாணவர்களிடம் வசூலிக்கப் படுவதில்லை. இந்தப் பெற்றோர் ஆசிரியர் சங்கமே செயல்படாத நிலையில், அதற்குண்டான நிதியும் இல்லாத நிலையில், எப்படி, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவது? வேண்டுமானால், அரசே, இதற்கென நிதியை ஒதுக்க வேண்டும், என்று தலைமை ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். 




 இதைக் கேட்டு, தங்களுக்கு தொகுப்பூதியம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.

No comments:

Post a Comment