பேருந்தில் படிக்கட்டு பயணத்தை தடுக்க முயற்சி அரசுப்பள்ளி மாணவிகளின் நூதன படைப்புக்கு தங்கப்பதக்கம் - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Monday 3 December 2018

பேருந்தில் படிக்கட்டு பயணத்தை தடுக்க முயற்சி அரசுப்பள்ளி மாணவிகளின் நூதன படைப்புக்கு தங்கப்பதக்கம்

கிருஷ்ணகிரியில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் மாநாட்டில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிரஜனி, சுரேகா ஆகியோரின் 'பேருந்தில் படிக்கட்டு பயணம் செய்பவர்களை தடுத்தல்' படைப்புக்கு முதல் பரிசு, தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.



கிருஷ்ணகிரியில் 'இந்தியா அறிவியல் புதுமைகள் கண்டுபிடிப்பு - 2018' என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான அறிவியல் மாநாடு நடந்தது. இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பிரஜனி, சுரேகா ஆகியோர் 'பேருந்தில் படிக்கட்டு பயணம் செய்பவர்களை தடுத்தல்' என்ற தலைப்பில் தங்களது படைப்பினை வைத்திருந்தனர்.




இது குறித்து மாணவிகள் கூறும் போது, ''பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வதால், பலர் தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். இதனைத் தடுக்க பேருந்தின் படிக்கட்டுடன் அலாரத்தை இணைக்க வேண்டும். படிக்கட்டில் பயணிகள் பயணம் செய்யும் போது, பேருந்து தானாக வேகம் குறைவதுடன், அலாரம் அடித்து எச்சரிக்கை செய்யும் வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது,'' என்றனர். இந்த படைப்புக்காக முதல் பரிசும், தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.



பரிசு பெற்ற மாணவிகள் மற்றும் அவர்களின் படைப்பிற்கு உறுதுணையாக இருந்த அறிவியல் ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பாராட்டினார். நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

1 comment: