அறிவியல் ஆர்வத்தை துாண்டும் 'இன்ஸ்பயர்' - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Sunday 9 December 2018

அறிவியல் ஆர்வத்தை துாண்டும் 'இன்ஸ்பயர்'


மாணவர்களின் திறமை வெளிபட எளிய வழி- அருப்புக்கோட்டை -இன்றைய நவீன உலகில் மாணவர்கள் பலவித சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. படிப்பும் மட்டும் அல்லாமல் கூடுதலாக தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. 





மாணவர்களின் மனதிற்குள் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளியில் கொண்டு வந்து ஆக்க பூர்வமாக பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அவற்றில் ஒன்று மத்திய அரசால் நடத்தப்படும் 'இன்ஸ்பயர்' நிகழ்ச்சி. இந்திய அரசோடு இந்திய தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை, நேஷனல் இன்னோவேஷன் பவுண்டடேஷன் இணைந்து நடத்துகிறது. வாழ்க்கைக்கு உதவும் கண்டுபிடிப்புகள் மற்றும் தனித்துவமான யோசனைகளை வெளிகாட்ட மாணவர்களை உற்சாகப்படுத்துவது,மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சியை துாண்ட உதவுவதே இதன் நோக்கம். 




இதற்காக மாணவர்களை பள்ளிகளில் தேர்வு செய்து முகாம் அமைத்து உணவு, இருப்பிடம், போக்குவரத்து செலவு, ரூ. ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பல் துறை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி எதிர்கால அறிவியல் கண்டு பிடிப்புகள் பற்றி விளக்குகின்றனர்.அந்த வகையில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில் 'இன்ஸ்பயர்' நிகழ்ச்சி 5 நாட்கள் நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 150க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர் சந்திரசேகர், பெங்களூரு இந்திய அறவியல் மைய பேராசிரியர் நடராஜன், மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் பாண்டியன், பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் லட்சுமணன் முகாம் நோக்கம் எதிர் கால திட்டங்கள் குறித்து விளக்கினார்.






அறிவியல் துறையில் பல ஆராய்ச்சிகளை செய்து அதில் பல கண்டுபிடிப்புகளை நாட்டிற்கு அர்ப்பணிப்போம் என மாணவர்கள் உறுதி எடுத்தனர். முகாமில் புத்துணர்ச்சி பெற்ற மாணவர்களின் 'பீட்பேக்'இதோ...ஊக்கப்படுத்திய முகாம்மனதில் உள்ள அறிவியல் கண்டு பிடிப்புகளை வெளி கொணர்ந்து, சாத்தியப்படுத்த ஊக்கமளித்தது. நாங்களும் எதிர் காலத்தில் விஞ்ஞானிகளாக வர முடியும் என்ற எண்ணத்தை உறுதி கொள்ள வைத்தது. பல்வேறு துறை ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளை சந்தித்து கலந்துரையாடியது மகிழ்ச்சிகரமான ஒன்று.ஜெயகாந்த்,ஆர்.கே.வி., மெட்ரிக்., பள்ளி, சாத்துார்.இத்தனை வாய்ப்புகளாமருத்துவம், பொறியியல் துறை என்றே மேற்படிப்பை தேர்ந்தெடுக்கும் நிலையில்,அறிவியல் துறையில் ஆராய்ச்சிகள் செய்ய பல்வேறு வழிகள் உள்ளது என்பது முகாமிற்கு வந்த பிறகு தான் தெரிகிறது.




அறிவியலில் மேற்படிப்பு படித்து ஆராய்ச்சியாளராகவும், விஞ்ஞானியாகவும் வர வேண்டும் என்பது என் ஆசை.கோபிகா கனி, முஸ்லிம் மேல்நிலை பள்ளி, அபிராமம் .புதுமையான அனுபவம்இதுபோன்ற அறிவியல் முகாம்கள் எங்களை போன்ற மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். இந்த முகாமில் கலந்து கொண்டு பல்வேறு துறை விஞ்ஞானிகளுடன் பேசியது, புதிய கண்டு பிடிப்புகள் பற்றி தெரிந்து கொண்டது புதிய அனுபவம். அறிவியல் துறையில் நல்ல எதிர்காலம் மாணவர்களுக்கு உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.ஜோத்சனா மேரி, ஜீவனா பள்ளி, மதுரை.மனதில் சிதையும் திறமைஇன்றைய மாணவர்களுக்கு பல்வேறு தனி திறமைகள் உள்ளன. அவற்றை வெளியில் கொணடு வர தேவையான 'பிளாட்பார்ம்' இல்லை.




திறமைகள் மனதிற்குள்லேயே சிதைந்து விடுகிறது. இதுபோன்ற முகாம்கள் புதிய கண்டு படிப்புகள், ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். இதுபோன்ற அறிவியல் முகாம்கள் அவசியம் நடத்தப்பட வேண்டும்.ஆயிசாபாத்திமா, முஸ்லிம் மேல்நிலை பள்ளி அபிராமம்.

No comments:

Post a Comment