வருகை பதிவுக்கு செயலி கட்டாயம் - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Saturday 1 December 2018

வருகை பதிவுக்கு செயலி கட்டாயம்

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளும், மாணவர்கள் வருகை பதிவுக்கு, &'ஆன்ட்ராய்டு ஆப்&' பயன்படுத்த வேண்டும்&' என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 




மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அதிக எண்ணிக்கையில் கணக்கு காட்டி, முறைகேடாக உதவிகள் பெறுவதாக புகார்கள் எழுந்தன.முறைகேடுகளை தடுக்கும் வகையில் மாணவர்கள் வருகை பதிவுக்கு, &'ஆண்ட்ராய்டு ஆப்&' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, &'சமக்ரசிக் ஷா&' திட்டத்தில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்வி மேலாண்மை தகவல் திட்டத்தில் உள்ள, மாணவர்களின் விபரங்களை பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.




எனவே, மாணவர்களின் வருகையை சரியாக பதிவு செய்யும் வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், TNSCHOOLS என்ற, &'ஆன்ட்ராய்டு ஆப்&' வசதியை, கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு, அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment