வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 17 மையங்கள் அமைப்பு கல்வி அதிகாரிகள் தகவல் - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Friday 28 December 2018

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 17 மையங்கள் அமைப்பு கல்வி அதிகாரிகள் தகவல்


வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 17 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 






தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக தனித்தேர்வர்கள் அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ள சேவை மையங்களில், நேற்று முதல் வரும் 5ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். வேலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு வரை 6 மையங்களில் மட்டுமே தனித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து வந்தனர். இந்தாண்டு கூடுதலாக 4 மையங்களில் தனித்தேர்வர்களுக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.



அதன்படி, திருப்பத்தூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் இந்து மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர் மஸ்ருல் உலூம் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் செயின்ட் ஆன்ட்ரூஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 10 மையங்களில் ஆண், பெண் இருபாலரும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.



அதேபோல், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி, சண்முக தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, செங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி, வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரணி எஸ்எஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 மையங்களில் இருபாலரும் வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment