ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் The JIPMER MBBS entrance examination can be applied today - KALVIDHEEBAM

Latest

EDUCATIONAL UPDATES

Recent Tube

BANNER 728X90

Wednesday 6 March 2019

ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் The JIPMER MBBS entrance examination can be applied today

கல்வி தீபம் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.






புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஆன்லைன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. இதன்படி வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 2ம் தேதி காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது. 



எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் (www.jipmer.puducherry.gov.in) மூலமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான பதிவு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.வரும் ஏப்ரல் 12ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மே 20ம்தேதி முதல் ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment